Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறையா?

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (07:58 IST)
தமிழகத்தில் அடுத்த 48 நேரத்திற்கு சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. 
 
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளீகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனையடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
 
சென்னையில் நேற்றிரவும் இன்று காலையும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, மடிப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதேபோல் சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments