Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயோடு பழகிய ஆட்டோ ஓட்டுனர் – மகன் செய்த் கொடூரம் !

Advertiesment
தாயோடு பழகிய ஆட்டோ ஓட்டுனர் – மகன் செய்த் கொடூரம் !
, புதன், 20 நவம்பர் 2019 (08:45 IST)
சென்னையில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திர்ந்த நபரை மகன் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.

சென்னை ரெட்டேரியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் அன்சர் பாஷா. இவரது ஆட்டோவில் பயணம் செய்யும் விநாயகபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணோடு இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இது லட்சுமியின் மகனான அஜித்துக்கு தெரிந்து ஆத்திரமடைந்துள்ளார். இது சமம்ந்தமாக அவர் அன்சர் பாஷாவிடம் தன் தாயை விட்டு விலகி விடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால் அதை அன்சர் பாஷா கேட்கவில்லை.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அஜித் தன் நண்பரகளுடன் சேர்ந்து அன்சர் பாஷாவைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். நேற்று இரவு ரெட்டேரி சிக்னல் அருகே அன்சர் பாஷா தன் தாயாருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அஜித் தன் நண்பர்களுடன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க நினைத்த அவர் ஓட முயல அவரைத் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் அன்சர் பாஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பர்சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகளைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 ஏக்கர் நிலத்தை திமுகவுக்கே கொடுக்க தயார்: டாக்டர் ராம்தாஸ் அறிவிப்பு