Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்.! புதிய ஆணையராக அருண் நியமனம்..!!

Advertiesment
Commisioner

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (13:11 IST)
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.  
 
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையராக இருந்த சந்தீப் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த அருண் ஐபிஎஸ், புதிய சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு புதிய ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாத! 25 பைசா கேட்டு வங்கியில் வாக்குவாதம்! கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்!