Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் அளித்த 478மனுக்களுக்கு தீர்வு!

மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் அளித்த 478மனுக்களுக்கு தீர்வு!

J.Durai

திருச்சி , வியாழன், 4 ஜூலை 2024 (15:31 IST)
மக்களுடன் முதல்வர் முகாமில் காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி,  உத்தரவின் பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
அதேபோல்  திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாநகர காவல் ஆணையர்  தலைமையில் நடைபெற்றது.
 
பொதுமக்கள்இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 53 மனுக்களை பெற்று, மனுக்கள்மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி,தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
 
மேலும் தமிழக முதல்வரால்  தொடங்கப்பட்ட "மக்களுடன்முதல்வர்" முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமைஇயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 1001 மனுக்கள் பெறப்பட்டு, 880 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம்உள்ள 120 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திருச்சி மாநகர காவல் ஆணையரிங சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அளித்த 814 மனுக்களில் 478 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு  மீதம் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இம்முகாமில், காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!