Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடுத்த பணத்தை கேட்டால் ஆபாச பட மிரட்டல்! – பேராசிரியரை மிரட்டிய 4 பேர் கைது!

கொடுத்த பணத்தை கேட்டால் ஆபாச பட மிரட்டல்! – பேராசிரியரை மிரட்டிய 4 பேர் கைது!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:25 IST)
சென்னையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பேராசிரியரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மத்திய அரசின் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் ரூ.4.50 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

ஆனால் வாங்கிய கடனை ராதா திரும்ப செலுத்தாததால் கடந்த 2019ம் ஆண்டு பேராசிரியர், ராதா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ராதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பேராசிரியரை தொடர்பு கொண்டு பேசிய ராதா, பணத்தை தருவதாக கூறி தனது தோழி ஒருவர் வீட்டிற்கு வர சொல்லியுள்ளார். அங்கு சென்ற பேராசிரியருக்கு தண்ணீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளனர்.

மயக்கமடைந்த அவரை நிர்வாணமாக்கி வேறு ஒரு பெண்ணுடன் சேர்த்து ஆபாசமாக வீடியோ எடுத்து, பின்னர் பணம் கேட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராதா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மூவரை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: வேலூர் கலெக்டர் உத்தரவு