சீனாவிலிருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸால் 41 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஜப்பான், தைவான், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பல்வேறு நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், சீனாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானப்பபயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.