Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனடாவில் தாக்கப்பட்ட தமிழ் மாணவி ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

கனடாவில் தாக்கப்பட்ட தமிழ் மாணவி ! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !
, சனி, 25 ஜனவரி 2020 (14:18 IST)
கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை படித்து வந்த ஏஞ்சலினா ரேச்சல் என்ற பெண் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

கனடா யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர் ஏஞ்சலினா ரேச்சல். இவரின் தந்தை ஆல்பர்ட் ராஜ்குமார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு அவரது படிப்பு முடியவுள்ளது. இவர் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ரேச்சல் கனடாவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.  குத்தப்பட்ட இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அவர் மயங்கிய இடத்தில் கிடந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த ரேச்சலுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மர்மநபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ரேச்சலின் தந்தை ‘ எனது மகளை சமூக வலைதளத்தில் ஒருவர் பின் தொடர்ந்ததாக என் மகள் என்னிடம் சொல்லியுள்ளார். எனது மகள் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அங்குள்ள ஊடகங்களில் அப்படி எதுவும் செய்தி வெளிவரவில்லை. எனவே எங்களுக்கே குழப்பமாக உள்ளது. விசா கிடைத்தவுடன் கனடா செல்ல இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி எனும் அம்பை ஏவியது யார்? பிரேமலதா கேள்வி!