தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ரெம்டெசிவிர் வாங்க சென்னைக்கு பயணிப்பது அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் நேற்று முதலாகவே பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பலர் மருந்துக்காக சென்னை வருவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிற்து.