Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் பலி! – குஜராத்தில் சோகம்!

Advertiesment
பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் பலி! – குஜராத்தில் சோகம்!
, புதன், 28 ஏப்ரல் 2021 (08:46 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3.50 லட்சத்தை கடந்துள்ளன. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்ற சிரமங்களை மாநிலங்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அமைச்சரவை கூட்டி கொரோனா பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்நிலையில் குஜராத்தில் பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் சித்தி நர்மதா பென்னுக்கு 80 வயதாகிறது. சமீபத்தில் இவர் கொரோனா தொற்று காரணமாக குஜராத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்து! – இந்திய வைரஸால் உலக நாடுகள் அதிர்ச்சி!