வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் அனுமதியின்றி இத்தகைய போர்டுகளை வைப்பதுடன், பூந்தொட்டிகளையும் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட போது, இதுபோல போர்டுகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் வீடுகளின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல வீடுகளின் கதவுகளில் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. ஆனால் சில விளம்பரதாரர்கள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு அதில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தையும் வைத்து விடுகின்றனர்.
வீட்டின் உரிமையாளர் தங்கள் வீட்டிற்கு பார்க்கிங் என்பது தொல்லையாக இருந்தால் அவர் வைப்பது என்பது வேறு, ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தினர் வீட்டில் உரிமையாளரிடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் நோ பார்க்கிங் விளம்பரத்தை ஒட்டி அதன் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்வது குறித்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.