1991ம் ஆண்டு வெளியான ‘குணா’ படத்தை ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குணா படத்தின் தயாரிப்பு நிறுவனம், இந்த படத்தை ரீரிலீஸ் செய்ய முயன்றபோது, அதன் பதிப்புரிமையை வாங்கியுள்ளதால் ரீரிலீஸ் செய்ய தடை கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
பதிப்புரிமை காலம் 2013ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால், ரீரிலீஸ் செய்ய தடை கோர முடியாது என தயாரிப்பு நிறுவனங்களான பிரமிட், எவர்கிரீன் நிறுவன தரப்பு வாதம் செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரீரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கினர். இதனால் விரைவில் இந்த படம் ரீரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் வெளியான போது குணா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் திடீரென வழக்கு காரணமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போன நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ரீதிகளை குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.