சென்னை மழை பாதிப்பு விவகாரம்: தாமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:29 IST)
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மழை வெள்ள பாதிப்புகளை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சரிசெய்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments