சென்னை பப் இளம்பெண்கள் விவகாரம்.. நடந்ததே வேறு.. அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:50 IST)
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் மதுபாரில் இளம் பெண்கள் உள்பட  சிலர் மது போதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்ததால் கலைந்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

ஆனால் இந்த சம்பவத்தில் நடந்ததே வேறு என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன. தனியார் மதுபாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த மதுபாருக்குள் 5 பேர் நுழையும் முயன்றதாகவும் தெரிகிறது.

ஆனால் மதுபாரின்  காவலர்கள் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தனியார் ஊடக செய்தியாளர் ஒருவரை வரவழைத்து அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததாகவும் இதனை அடுத்து காவல் துறையினர் வந்து மதுபாரில் நடந்த சட்ட விதி மீறலை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

 அந்த ஐந்து நபர்களை மதுபாரின் காவலர்கள் உள்ளே விட்டிருந்தால் இந்த பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது என்றும் தங்களை உள்ளே விடாததால் பழிவாங்கும் நோக்கில் அவர்கள் காவல்துறையினரிடம் போட்டு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதி வாங்கிய பிறகுதான் சமூக வலைதள கணக்குகள் தொடங்க வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு..!

தவெகவுக்கு வாக்குகள் கிடைக்கும்.. ஆனால் வெற்றி பெற முடியாது: ஆறுதல் பரிசு கூட கிடைக்காது: கார்த்தி சிதம்பரம்

இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை.. மாலை விலை நிலவரம்..!

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சலுகைகள் கொட்டி கிடக்குமா? பரபரப்பு தகவல்..!

சென்னையில் கொல்லப்பட்ட பீகார் பெண்ணின் உடல்.. 3 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments