Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும்: வெதர்மேன் பிரதீப் ஜான்

Advertiesment
சென்னையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும்: வெதர்மேன் பிரதீப் ஜான்
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (15:31 IST)
வட தமிழகம் அருகே மேலடுக்கு சுழற்சி இருக்கும் காரணத்தால் சென்னை உள்பட வட தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன் பிரதீப் ஜான் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்த விவரங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இன்னும் நான்கு நாட்களுக்கு சென்னை உள்பட வட தமிழகத்தில் மழை பெய்யும் என்று தெரிவித்தார்.

மேலடுக்கு சுழற்சி காற்றின் வேகம் வட தமிழகம் அருகே இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அதன் பிறகு அந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக அரபிக் கடலை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து உள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று குறிப்பாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.  

சென்னையை பொருத்தவரை பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்  அக்டோபரில் குறைவான மழை தான் தமிழகத்தின் பெய்துள்ளது என்றும் நவம்பரில் ஓரளவுக்கு மழை பெய்து உள்ளதால் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு- அண்ணாமலை, தினகரன் இரங்கல்