Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா, அண்ணன்னு நினைச்சேன்.. என்ன சீரழிச்சிட்டாங்க! – கலங்க வைக்கும் வளர்ப்பு மகளின் கதை!

Advertiesment
girl abuse
, புதன், 6 ஏப்ரல் 2022 (11:29 IST)
சென்னையில் கல்லூரி படிக்கும் இளம் சிறுமியை அவரை வளர்த்த குடும்பத்தினரே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த தம்பதியர் காலமான நிலையில் அவர்களுக்கு பிறந்த ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை, குழந்தையின் சகோதரி வளர்க்க முடியாமல் சென்னையை சேர்ந்த ஷெரீப் தம்பதியருக்கு தத்து கொடுத்துள்ளார்.

ஆரம்பம் முதலே பெண் குழந்தையை ஷெரீப் மற்றும் அவரது மனைவி ஜமீலா ஆகியோர் சொந்த குழந்தை போலவே வளர்த்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது 17 வயது நிறைவடைந்த சிறுமி கல்லூரி முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முதலில் சிறுமி பூப்பெய்தியது முதலாக அவரது வளர்ப்பு தந்தை ஷெரீப் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அவரது மிரட்டலால் சிறுமி அதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் இந்த விஷயம் ஷெரீப்பின் மகன்களுக்கு தெரிய வந்தபோது அவர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதுகுறித்து வளர்ப்பு தாய் ஜமீலாவிடம் சொன்னதற்கு அவர்களிடம் விருப்பப்படி நடக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இவர்கள் கொடுமையால் சிறுமி ஒருமுறை கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் மறைமுகமாக கர்ப்பத்தை கலைத்த ஷெரீப் குடும்பம் மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது.

இதை தாங்க முடியாத சிறுமி தன்னை தத்துக் கொடுத்த சகோதரியிடம் இதை பற்றி சொல்லி அழவே, அதிர்ச்சியடைந்த சகோதரி இதுகுறித்து உடனடியாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஷெரீப் அவரது மூன்று மகன்களையும், வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய் ஜமீலாவையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னையில் வளர்ப்பு பெண்ணுக்கு நடந்த இந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு குடமுழுக்கு! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!