Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தம்

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (07:29 IST)
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை சிக்னல் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் சங்கம் அமைத்ததாக குற்றஞ்சாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இன்று இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. இருப்பினும் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
போராட்டம் தொடர்ந்தாலும் தற்காலிக ஊழியர்கள் மூலம் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கூறிய மெட்ரோ நிர்வாகம், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒருசில ரயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments