அதிமுக, திமுகவெல்லாம் தள்ளி நில்லுங்க..! – தனி ஒருவனாய் வென்ற சுயேட்சை வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (12:04 IST)
சென்னையில் மாநகராட்சியில் அதிமுக, திமுக கட்சிகளை பின்னுக்கு தள்ளி வார்டு ஒன்றில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பெருவாரியான வார்டுகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சி 23வது வார்டில் திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராஜன். தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில் ராஜன் முக்கிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி 3,953 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!... சுவாரஸ்ய தகவல்!...

நீயா நானா பாத்துக்கலாம்!.. டிரம்பின் போன் காலை எடுக்காமல் தவிர்க்கும் மோடி!...

புதினை தூக்கும் பிளான் இப்போது இல்லை!.. டொனால்ட் டிரம்ப் நக்கல்!....

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments