Publish Date: Tue, 22 Feb 2022 (11:09 IST)
Updated Date: Tue, 22 Feb 2022 (11:12 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.
கோவை மாநகராட்சியில் இதுவரை 8 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் 5 இடங்களில் திமுக, 2 இடங்களில் காங்கிரஸ், ஒரு இடத்தில் சிபிஎம் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதிகளில் திமுக வெற்றி பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.