Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - அதிமுகவோடு சரிசமமாக வரும் கமல்!!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (08:28 IST)
மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என தகவல். 

 
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் வரும் தேர்தலில் நேருக்கு நேர் பெரும்பாலான தொகுதிகளில் மோத இருக்கும் நிலையில் மூன்றாவது கூட்டணியாக கமல்ஹாசன் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து உள்ளன என்பது தெரிந்ததே. 
 
ஆம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஐஜேகே கட்சிக்கு 40 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 154 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இன்று அதிமுக மற்றும் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments