Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி விவராங்களை இன்றோடு முடிக்கும் ஸ்டாலின் : அடுத்து என்ன?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (08:18 IST)
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது. 
 
அதன்படி, திமுக தனது கூட்டணியில் 12 கட்சிகளை இணைத்துக்கொண்டுள்ளது. திமுக - 174, காங்கிரஸ் - 25, சி.பி.எம் - 6, சிபிஐ - 6, விசிக - 6, மதிமுக - 6, ஐ.யூ.எம்.எல் - 3, கொ.ம.தே.க - 3, மமக - 2, த.வா.க - 1, ஆ.த.பேரவை - 1, ம.வி.க - 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. 
 
தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது திமுகவின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 
 
இதனோடு திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் இன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்த உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபச்சார விடுதி நடத்திய பெண்ணுக்கு உதவி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்..!

முட்டை சாப்பிட மாட்டோம்.. டிசி கேட்டு பயமுறுத்தும் 80 மாணவர்கள்.. பள்ளியில் பரபரப்பு..!

மனைவியுடன் சண்டை.. பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன்! - சென்னையில் அதிர்ச்சி

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments