Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

Advertiesment
MGM Cancer Institute

Prasanth Karthick

, சனி, 1 பிப்ரவரி 2025 (09:17 IST)

●       இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டுவிழாவை குறிக்கும் வகையிலும், உலக புற்றுநோய் தினம் 2025 நிகழ்வை ஒட்டியும் ‘வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம்’ (Beat Fear with Fun) என்ற பெயரில் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை பரப்பும் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

 

 

சென்னை, ஜனவரி 31, 2025: ‘வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம்’ என்ற பெயரில் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக இரு-நாட்கள் நிகழ்வாக வேடிக்கையும், குதூகலமும் நிறைந்த ஒரு நிகழ்ச்சியை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தியது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டுவிழா கொண்டாட்டம் மற்றும் உலக புற்றுநோய் தினம் 2025-ன் அனுசரிப்பின் ஒரு பகுதியாக இம்மாநகரில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் கூடுதலான மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.  எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குநரும், மருத்துவ புற்றுநோயியலின் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்ஏ ராஜா, இந்த இரு-நாள் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

 

                                       

 

புற்றுநோய், அதன் இடர்காரணிகள், வராமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கும், மற்றும் குறிப்பாக மாணவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்து கற்பிப்பதே இந்நிகழ்வின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஈடுபாடு கொள்ளச் செய்யும் ஆர்வமூட்டும் செயல்நடவடிக்கைகளின் வழியாக புற்றுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளையும், கட்டுக்கதைகளையும் இந்நிகழ்வு பங்கேற்பாளர்கள் மனங்களிலிருந்து அகற்றியது; தன்முனைப்புடன் உடல்நல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அச்சமின்றி உடல்நல சவால்களை எதிர்கொள்ளவும் நம்பிக்கையையும் அவர்களின் மனங்களில் இத விதைத்தது. தைரியத்துடன் புற்றுநோயை எதிர்த்து போராடி சிகிச்சையின் மூலம் வென்றவர்களை கவுரவித்த இந்நிகழ்வு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பையும் இந்நிகழ்வு வழங்கியது. 2025 ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தினங்களில் பொதுமக்கள் நேரில் வருகை தந்து இந்நிகழ்வில் பங்கேற்று பலனடையலாம்.

 

 

 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குநர் டாக்டர். அர்ஜிதா ராஜகோபாலன் இந்நிகழ்வு குறித்து  பேசுகையில், “புற்றுநோய் மீதான அச்சத்தை ஒழிக்க எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்தி வரும் தளராத யுத்தத்தின் இரு ஆண்டுகள் நிறைவை நாங்கள் கொண்டாடி மகிழும் இத்தருணத்தில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பயமுறுத்துவதாக இருக்கக்கூடாது; மாறாக இது நம்பிக்கையையும், திறனதிகாரத்தையும் வழங்குவதாக இருக்க வேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். ‘Beat Fear with Fun’ என்ற பெயரில் நாங்கள் நடத்தும்  சுகாதார மற்றும் நலவாழ்வு கொண்டாட்ட நிகழ்வின் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பரவலை ஈடுபாடுள்ள, நம்பிக்கையளிக்கிற அனுபவமாக நாங்கள் மாற்றுகிறோம். மேஜிக் ஷோ, கலரிங் ஸ்டேஷன்கள், சிறப்பான வீடியோ பூத்கள் போன்ற கலந்து செயல்படும் நடவடிக்கைகளின் வழியாக மக்களுக்கு, அதுவும் குறிப்பாக இளையோருக்கு புற்றுநோய் மீதான விழிப்புணர்வை எளிதாக பெறக்கூடியதாகவும், மகிழ்ச்சியான அனுபவமாகவும் ஆக்க நாங்கள் விரும்பினோம். அச்சமில்லாத எதிர்காலம் என்பது சரியான தகவல்களை பெற்றிருக்கும் அறிவிலிருந்து ஆரம்பமாகிறது. எனவே புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டங்களையும், கட்டுக்கதைகளையும் உடைத்தெறியவும், சிகிச்சையின் மூலம் குணமடைய முடியுமென்ற நம்பிக்கையை மனதில் பதிய வைக்கவும் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். சிறந்த விழிப்புணர்வு என்பது வாழ்க்கையின் கொண்டாட்டம் என்பதை இதன் மூலம் உறுதி செய்வது எமது நோக்கமாகும்” என்று கூறினார்.

 

 

 

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்-ன் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குநரும், மருத்துவ புற்றுநோயியலின் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம்ஏ ராஜா இது குறித்து கூறியதாவது: “உலகளவில் 2022-ம் ஆண்டில் ஏறக்குறைய 20 மில்லியன் நபர்களுக்கு புதிதாக புற்றுநோய் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கையானது 2052-ம் ஆண்டிற்குள் 35 மில்லியன் என்ற அளவை எட்டுமென முன்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.  இந்தியாவிலும் சூழ்நிலையானது அதிக கவலையளிப்பதாக இருக்கிறது. இதே ஆண்டில் 1.4 மில்லியன் நபர்களுக்கு புற்றுநோய் நம் நாட்டில் ஏற்பட்டதாக அறியப்பட்டது. இந்த பெரும் சவால்கள் இருப்பினும் தொடக்க நிலையிலேயே கண்டறிவதில் முன்னேற்றங்கள், துல்லிய மருத்துவம் புத்தாக்க சிகிச்சை முறைகள் ஆகியவை புற்றுநோய் வந்த நபர்களுக்கு உயிர்பிழைப்பு விகிதங்களை கணிசமாக மேம்படுத்தி இலட்சக்கணக்கான நபர்களுக்கு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. புற்றுநோய் அறிகுறி நிலை கண்டறிவதற்கான ஸ்கிரீனிங் செயல்பாடு, நவீன தொழில்நுட்பத்துடன் பிரத்யேக கவனிப்பு மற்றும் சிகிச்சை திட்டங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு வெற்றிகரமான சிகிச்சையை வழங்கியிருப்பதன் மூலம் எமது மருத்துவமனை மகத்தான முன்னேற்றங்களை செய்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும் மருத்துவமனைகளால் ஓரளவிற்கு மட்டுமே புற்றுநோயின் பெரும் சுமையை குறைக்க முடியும்; இதை உண்மையிலேயே குறைப்பதற்கு தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதும் அவர்களது ஆரோக்கியம் மீதான பொறுப்பினை தன்முனைப்புடன் கொண்டிருப்பதும் அவசியம்”.

 

 

 

இந்த விழிப்புணர்வு கொண்டாட்ட நிகழ்வில் வீடியோ காட்சிப்பிரிவு பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த அம்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. புற்றுநோய் அதன் பல்வேறு வகைகள், பொதுவான அறிகுறிகள், சிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வராமல் முன்தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சரியான தகவல்களையும், அறிவையும் பெறுவதற்கு மாணவர்களுக்கும், வருகையாளர்களுக்கும் நல்ல வாய்ப்பை இது வழங்கியது. மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர்கள் இதுகுறித்த விவரங்களை விளக்கிக்கூறி ஐயங்களை தெளிவுபடுத்தினர். மருத்துவ நிபுணர்கள் தலைமையேற்று நடத்திய இன்டராக்டிவ் அமர்வுகளும் இதில் இடம் பெற்றன; ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய்க்கான இடர்வாய்ப்புகளை குறைக்கவும், நடைமுறை சாத்தியமுள்ள வழிகாட்டல்களை இந்த அமர்வுகள் வழங்கின.

 

 

 

ஒரு தனித்துவமான, வேடிக்கையான செயல்பாடாக, ‘நம்பிக்கையின் வளையம்’ (‘Hope of Ring’) என்பது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பொருட்கள் பற்றிய தங்களது அறிவை வருகையாளர்கள் இதில் பரிசோதித்துக் கொள்ளலாம். நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் சில பொருட்கள், ஆபத்தை விளைவிக்கக்கூடிய  வேறுபிற பொருட்கள் ஆகியவை உட்பட பல்வேறு பொருட்கள் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தன. ஆரோக்கியத்திற்கு உதவுகிற பொருட்கள் மீது ஒரு வளையத்தை சரியாக தூக்கி எறிய வேண்டிய சவாலும், வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. சரியான பொருட்கள் மீது வளையத்தை தூக்கி எறிந்தவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன.

 

 

 

இந்நிகழ்வின்போது அளவிடப்பட்ட உடல் உயரம், எடை, உடல் நிறை குறியீட்டெண் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற அத்தியாவசிய உடல்நல தரவுகள் பதியப்பட்ட ஒரு தனித்துவமான உடல்நல பாஸ்போர்ட்-ஐ இந்நிகழ்வின்  வருகையாளர்களுக்கு எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் வழங்கியது. தனிப்பட்ட உடல்நல பதிவேடாக செயல்படும் இந்த புதுமையான பாஸ்போர்ட், தங்களது நலவாழ்வு பயணத்தைத தடமறிவதற்கு இவர்களுக்கு உதவும். 21 நாட்கள் வாழ்க்கைமுறை காலண்டரும் இதில் இருப்பதால், தங்களது ஆரோக்கியமாக உணவுன்னும் பழக்கவழக்கங்களையும், உடற்பயிற்சி நேரம், தண்ணீர் அருந்தல் அளவு மற்றும் தூங்குகிற மணிநேரங்கள் ஆகிய தரவுகளை அவர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

 

புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பல்வேறு கருத்தாக்கங்களை சுற்றி வடிவமைக்கப்பட்டிருந்த கலரிங் ஷீட்கள் மீது மாணவர்கள் வண்ணம் தீட்டுவதற்கான கலரிங் ஸ்டேஷனில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்த வண்ணமயமான படைப்புகள் நம்பிக்கையின் சுவர் என்பதில் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறுக்கெழுத்து போட்டி, வெற்றிடத்தை நிரப்புதல், பல்வேறு விருப்பத்தேர்வுகள் கொண்ட வினாக்கள் ஆகியவை உட்பட இன்டராக்டிவ் புதிர் போட்டிகள் மூலம் தாங்கள் புதிதாக பெற்றுக்கொண்ட அறிவையும், தகவலையும் பரிசோதித்துக் கொள்ளும் வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மகிழ்ச்சியான, வேடிக்கையான மற்றும் ஆர்வமூட்டுகிற விதத்தில்  புற்றுநோய் மீதான விழிப்புணர்வை ஊக்குவித்த அதே நேரத்தில், இக்கொண்டாட்ட அமைவிடத்தில் நிழற்படம் எடுக்கும் நிலையமும் அமைக்கப்பட்டிருந்தது, வருகையாளர்கள் இந்த நிகழ்வு குறித்த பசுமையான நினைவுகளை தக்கவைக்க நிழற்படங்கள் எடுத்துக் கொள்ள இது அனுமதித்தது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!