Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Advertiesment
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Prasanth Karthick

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (18:48 IST)

டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யமுனை நதியில் பாஜக விஷம் கலப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த களேபரங்களுக்கு நடுவே தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் திடீரென கட்சியிலிருந்து விலகியுள்ளனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு சீட் வழங்கக்கோரி அவர்கள் கேட்டும் அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?