Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!!

மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!!
, புதன், 6 மே 2020 (16:07 IST)
தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,, டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து , உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் கொரோனாவைரஸ் தாக்கம் முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது.

மதுக்கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும். அதேசமயம் மக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் .மது மொத்த விற்பனை செய்யப்படாது. தனிநபர்களுக்கு மட்டும் தான் விற்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்