Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 மணி அப்டேட்: இன்றைய கொரோனா +ve case எத்தனை?

Advertiesment
12 மணி அப்டேட்: இன்றைய  கொரோனா +ve case எத்தனை?
, புதன், 6 மே 2020 (12:32 IST)
தற்போது வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அந்த வகையில் தற்போது வரை கணடறியப்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் பின்வருமாறு... 
 
1. கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
2. சென்னை கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது
 
3. சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
4. சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
5. சென்னை சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
6. சென்னை சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த குவிந்த பணம் எவ்வளவு??