கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (10:35 IST)
'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு 'அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , '*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்' என்று கூறினார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் விலகியது குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியபோது, 'நாஞ்சில் சம்பத் விலகி போனது வருத்தமளிக்கின்றது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வோம்' என்று கூறினார். ஆனால் நாஞ்சில் சம்பத் கொடுத்து கொண்டிருக்கும் பேட்டியில் அவர் ஆவேசமான கருத்துக்களையும் தினகரன் குறித்து கடுமையாகவும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் மீண்டும் அவர் தினகரனுடன் இணைவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments