Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 மாவட்டங்களில் Tidal Park: தொழில்துறையை வளர்க்க சிறப்பு திட்டங்கள்

4 மாவட்டங்களில் Tidal Park: தொழில்துறையை வளர்க்க சிறப்பு திட்டங்கள்
, வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:04 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது.

 
தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இதில் தொழில்துறையை வளர்க்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் பின்வருமாறு... 
 
1. அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு
2. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் நெய்வேலியில் அமைக்கப்படும்
3. 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்
4. தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் அறைகலன்கள் சர்வதேச பூங்கா அமைக்கப்படும்
5. சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்
6. அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கித்தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்
7. விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பார்க் உருவாக்கப்படும்
8. திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்
9. கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்திப்பூங்காவை மாநில அரசு செயல்படுத்தும்
10. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புவியியல் புதைபடிவ பூங்கா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு பட்ஜெட்; பள்ளி கல்விக்கு முக்கியத்துவ அளிக்கும் திட்டங்கள்!