தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளி கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார்.
அதில் பள்ளிக்கல்வி மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு
865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.20.76 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும்
அடிப்படை கல்வியறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்படும்
413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 டேப்லட்கள் வழங்க ரூ.13.22 கோடி நிதி ஒதுக்கீடு