புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

Mahendran
வியாழன், 4 டிசம்பர் 2025 (12:25 IST)
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த 10 வயது பள்ளி மாணவி தர்ஷிகாவின் உடல், புதன்கிழமை மாலை சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
 
மறுநாள் காலை, சடங்குகள் செய்வதற்காக குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, உடல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாயமான சடலம் இன்னும் ஆழத்தில் உள்ளதா, அல்லது நரபலி கொடுப்பதற்காக யாரேனும் தோண்டி எடுத்து சென்றனரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சுடுகாட்டில் இருந்து சிறுமியின் உடல் மாயமான இந்த மர்ம சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments