Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் ஆபரேஷன் ராவணா; திட்டம் தீட்டும் தேசிய கட்சி..

Advertiesment
தமிழகத்தில் ஆபரேஷன் ராவணா; திட்டம் தீட்டும் தேசிய கட்சி..
, புதன், 28 மார்ச் 2018 (15:58 IST)
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தென் இந்தியாவில் கால் பதிக்க பாஜக ரூ.4,800 கோடி செலவிட திட்டமிட்டிருப்பதாக தெலுங்கு நடிகர் சிவாஜி பரபரப்பான தகவலை வெளியிட்டார். தற்போது இவர் தமிழகத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
 
பாஜக தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க ஆந்திரா, தெலுங்கானாவிற்கு ‘ஆபரேஷன் கருடா’ எனவும், கர்நாடகாவிற்கு ‘ஆபரேஷன் குமாரா’ எனவும், தமிழகத்திற்கு ‘ஆபரேஷன் ராவணா’ எனவும் பெயர் சூட்டி திட்டமிடப்பட்டு வருவதாக வீடியோ மூலம் தெரிவித்தார். 
 
தற்போது, தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கூறியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே செயல்பட துவங்கிவிட்டது என நினைக்கிறேன். 
 
ஜெயலலிதா மறைவு, இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக, சசிகலா கைது, மூன்றாக பிரிந்த அதிமுக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2ஜி வழக்கு தீர்ப்பு, கமல் - ரஜினி அரசியல் பிரவேசம் அனைத்தும் தொடர்புடையவையே.
webdunia
ஆனால், எனக்கு தெரிந்தவரை நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த ஆபரேஷன் ராவணாவில் இல்லை. இவர்கள் அரசியலில் சாதிக்க அதிக வாய்ப்புகளும் உள்ளன. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என கூற முடியுமா? 
 
ரஜினி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அரசியல் களத்தில் இறங்குகிறார். எனவே, இவர் ஒரு மதவாதி, பாஜகவை சேர்ந்தவர் என நினைக்க கூடாது. இவரை பாஜக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. கமல்ஹாசன் கொஞ்சம் கம்யூனிஸ்ட் மனோபாவம் கொண்டவர் என கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
ஆபரேஷன் ராவணாவில் ரஜினியும் இல்லை கமலும் இல்லை என கூறும் பட்சத்தில் யாரை வைத்து பாஜக தமிழகத்தில் நுழைய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணு ஆயுத சோதனையை நிறுத்த தயார்: கிம்மின் மாற்றத்திற்கான காரணம் என்ன?