வடகொரிய அதிபர் சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் நேற்று வெளியானது. ஆனால், இந்த தகவல் உண்மை என நிரூபிக்கும் வண்ணம் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை நான்கு நாள் சுற்றுப்பயணமாக சீனா வந்திருக்கிறார். கிம்மின் இந்தச் சீன பயணம் குறித்து ரகசியம் காக்கப்பட்ட நிலையில் இந்த செய்திகள் சீன ஊடங்களில் வெளியானது.
மேலும், கிம்முடன் அவரது மனைவியும் சீனா சென்றுள்ளதாக தெரிகிறது. இருநாட்டு உறவு குறித்தும், சமீபத்தில் கொரிய தீபகற்ப பகுதியில் நிலவிய பதற்ற நிலைக்குறித்து ஆலோசனைகள் நடந்ததாம்.
அப்போது கிம், கொரிய தீபகற்பத்தில் தற்போதைய நிலைமை சீராக உள்ளது. எங்களது நல்லெண்ண முயற்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா ஒத்துழைப்பு அளித்தால் அணு ஆயுத சோதனை விவகாரம் தீர்க்கப்படும் என்று கூறியிருக்கிறார்.