Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்...'' - நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை

Advertiesment
Modi

SInoj

, புதன், 10 ஏப்ரல் 2024 (17:20 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி  நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
 
3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் பாஜக தீவிரமாக இயங்கிவருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக,  திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
 
இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் தேர்தல்களே நடக்காது என நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தல் இந்தியாவின் வரைபடம் மாறும், மணிப்பூர், லடாக், பிரச்சனை போன்றவை நாடெங்கும் நடக்கும். இந்தியாவில் தேர்தலை மறந்துவிட வேண்டியதுதான் என எச்சரித்துள்ளார்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தெரிவித்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக் காதலை கண்டித்த கணவரை கொன்ற மனைவி!