Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டிய பாஜக பிரமுகர்!

Advertiesment
ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டிய பாஜக பிரமுகர்!
, திங்கள், 7 ஜூன் 2021 (07:54 IST)
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பதவியேற்ற பின் திமுக அரசின் கொரோனா கால செயல்பாடுகள் பாராட்டுக்கு உரிய விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் கோயம்புத்தூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகளை அந்த வார்டிலேயே சென்று சந்தித்தார். இது சம்மந்தமாக முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய பாஜக பிரமுகருமான டாக்டர் ஹெண்டே ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளர்.

அதில் ‘கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது. கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார். அதேநேரம் நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்: என்னென்ன கடைகள் திறக்கலாம்?