50 தொகுதிகளை கேட்கிறாரா அமித்ஷா? அதிர்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சற்றுமுன் அவர் டெல்லி கிளம்பியுள்ளார். அவருடைய வருகை தமிழக அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்றைய அமித்ஷா கலந்து கொண்ட கூட்டமொன்றில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 10 அல்லது 15 தொகுதி கேட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக தங்களுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா நேற்று கேட்டதாகவும் அதிலும் குறிப்பாக அதிமுக வலிமையாக உள்ள கொங்கு மண்டலத்தில் மட்டும் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திஉஅதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இதனால் அதிமுகவின் தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது
அமித்ஷாவின் வருகைக்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தங்கள் மடியிலேயே கை வைத்ததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
அதிமுக குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என திட்டமிட்டிருக்கும் நிலையில் பாஜக மட்டுமே 50 தொகுதிகளை கேட்டால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எப்படி தொகுதிகள் ஒதுக்குவது என்ற குழப்பத்தில் தற்போது அதிமுக உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன