வரும் 2001இல் திமுகவின் ஆட்சி என உதயநிதி பேசியது குறித்து பாஜக பிரமுகர் கிண்டல் செய்து விட்டு விட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தொண்டர்கள் அமோகமாக திரண்டு அவரது பேச்சை கேட்டு வருகின்றனர்
தமிழகத்தில் முதன்முதலாக திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது என்பதும் அதிலும் திமுக தலைவரின் வாரிசே நேரடியாக களம் இறங்கி உள்ளதால் திமுக தரப்பில் உற்சாகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று கூட்டமொன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என்று சொல்வதற்கு பதிலாக 2001 இல் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். இதுகுறித்து பாஜக பிரமுகர் சிடிஆர் நிர்மல்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் கூறியபோது, 2001யில் ஆட்சியமைக்க போகிறாராம் ஸ்டாலின்.." சொல்கிறார் உதயநிதி. தந்தை 8 முறை உளறினால் மகன் 16 முறை உளறுகிறார். என்று கூறியுள்ளார்