Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்டத்திற்கு ஒரு தொகுதி: அதிமுகவிடம் 38 தொகுதிகள் கேட்க பாஜக திட்டம்?

Advertiesment
மாவட்டத்திற்கு ஒரு தொகுதி: அதிமுகவிடம் 38 தொகுதிகள் கேட்க பாஜக திட்டம்?
, ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (08:45 IST)
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்தில் அமித்ஷாவின் வருகையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இதனை உறுதி செய்தனர் 
 
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் ஜேபி நட்டா தமிழகம் வரவிருப்பதாகவும் அப்போது தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில் 38 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் நோட்டாவுக்கும் குறைவான சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள பாஜகவுக்கு ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொகுதிகள் கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தாங்கள் எதிர்பார்த்த தொகுதியை கொடுக்கவில்லை என்றால் தனி அணி அமைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ரஜினி கமல் ஆகிய இருவரும் தனித்தனியாக போட்டியிட உள்ள நிலையில் பாஜக தனிக்கூட்டணி அமைத்தால் பலமுனை போட்டி தமிழகத்தில் வரும் தேர்தலில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாத்துலயும் மொத ஆளா முந்திக்கணும்! – மய்யத்தின் டார்கெட்டில் மதுரை!