Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இணைந்த முன்னாள் திமுக அமைச்சரின் மகன்!

Advertiesment
பாஜகவில் இணைந்த முன்னாள் திமுக அமைச்சரின் மகன்!
, வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:03 IST)
பாஜகவில் இணைந்த முன்னாள் திமுக அமைச்சரின் மகன்!
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் இன்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
 
கடந்த 1984ஆம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் பரிதி இளம்வழுதி. அதன்பின்னர் 1989 முதல் 2011 வரை தொடர்ச்சியாக எம்.எல்.ஏவாக இருந்தார். மேலும் 2006ஆம் ஆண்டு மு கருணாநிதி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக இருந்தவர் பரிதி இளம்வழுதி.
 
மேலும் பரிதி இளம்வழுதி 2013ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் இன்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி