Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Advertiesment
அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
, சனி, 9 நவம்பர் 2019 (08:11 IST)
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை மாநகர போலீசார் தயார் நிலையில் இருக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னையில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், நகரம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தீர்ப்புக்கு பின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பதும், பயணிகளின் உடமைகள் சோதனைக்கு பின்னரே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கை – அரசுக்குத் தடை விதித்த நீதிமன்றம் !