Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்டது அத்திவரதர் தரிசன பாதை – ஏமாற்றத்தில் பக்தர்கள்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (13:11 IST)
அத்திவரதர் தரிசனத்திற்கான பொதுவழி மூடப்பட்டதால் தரிசனத்துக்கு வந்த பல பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்ப சென்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்தை காண பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். ஜூலை ஒன்று முதல் தொடங்கிய தரிசனத்தில் 31ம் தேதி வரை அத்திவரதர் சயனக்கோலத்திலும் ஆகஸ்டு ஒன்று முதல் நின்ற நிலையிலும் காட்சி தருவார் என கூறப்பட்டிருந்தது.

நாளை முதல் நின்ற கோல தரிசனம் தொடங்குவதால் இன்று மதியம் 12 மணிக்கு தரிசனம் முடிவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சயனக்கோல நிலையில் ஒருமுறையாவது தரிசித்து விட வேண்டுமென பலர் முண்டியடித்து கொண்டு நேற்றிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர்.

இன்று காலை முதல் கூட்டம் ஓரளவு குறைவாகவே இருந்தது. மதியம் 12 மணிக்கு நடை மூடப்படும் போது சில நூறு பக்தர்கள் இருந்தார்கள். அவர்களால் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்தோடு திரும்பினர். நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிப்பார் என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments