Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அத்திவரதரால் அரசு பள்ளிகள் விடுமுறை- நாளை கடைசி நாள்

Advertiesment
அத்திவரதரால் அரசு பள்ளிகள் விடுமுறை- நாளை கடைசி நாள்
, செவ்வாய், 30 ஜூலை 2019 (13:09 IST)
அத்திவரதரின் சயனக்கோல தரிசனம் நாளையோடு முடிவடைவதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் காஞ்சிபுரத்திற்கு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அதிசய நிகழ்வான அத்திவரதர் வைபவம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் விமரிசையாக நடந்து வருகிறது. ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த தரிசனம் ஆகஸ்டு 17 வரை நடைபெறும். ஜூலை 31 வரை சயனக்கோலத்தில் தரிசனம் தரும் அத்திவரதர், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார்.

நாளையோடு சயனக்கோல தரிசனம் முடிவடைவதால் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். இதனால் நாளை மதியம் 12 மணிக்கெல்லாம் நடை அடைக்கப்பட்டு தரிசனத்திற்கு வந்தவர்கள் 5 மணிக்குள் தரிசனம் முடிந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுவதால் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வி.வி.ஐ.பி அட்டை வைத்திருப்பவர்கள் நாளை மாலை 3 மணிவரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி அட்டை வைத்திருப்போர் பகல் 12 மணி வரையிலும், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 12 மணி தொடங்கி 3 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவர்.

ஆடிப்பெருக்கு அன்றே ஆடிப்பூரமும் வருவதால் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது. ஆதலால் ஆகஸ்டு 3ம் தேதி மதியம் 3 மணிமுதல் 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றிரவு 8 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரையிலும் அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கால்நடைகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ