Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டதுக்கெல்லாம் மேக்சிமம் தள்ளுபடி: ”அமேசான் ஃப்ரீடம் சேல்”!!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (12:59 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ஃப்ரீடம் சேல் என்னும் பெயரில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. 
 
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும். 
 
அந்த வகையில் அமேசான் நிறுவனம், அமேசான் ஃப்ரீடம் சேல்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த சூப்பர் விற்பனையில் அமேசான் வழங்கும் தள்ளுபடிகள் குறித்த விவரம் பின்வருமாறு... 
1. ஸ்மார்ட்போன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி 
2. குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.6,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 
3. பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி
4. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி
5. வீட்டு உபயோக பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி
6. ஆடை, ஆபரணங்கள், பேஷன் தயாரிப்புகளுக்கு 80% வரை தள்ளுபடி
7. பலசரக்கு பொருட்களுக்கு 70% தள்ளுபடி
8. அமேசானின் பிரத்யேக தயாரிப்புகளுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி 
அமேசான் ஃப்ரீடம் சேல் 8 ஆம் தேதி துவங்கி 11 ஆம் தேதி நிறைவடைகிறது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஃப்ரீடம் சேல் 7 ஆம் தேதியே துவங்கும். 
 
இந்த தள்ளுபடி விவரங்கள் மேலோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டுகளின் தயாரிப்புகள், எந்த மாடல்களுக்கு எவ்வளவு ரூபாய் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments