Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்கலாம்… அற்புதம் அம்மாளுக்கு அனுமதி!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:58 IST)
பேரறிவாளனை ஜனவரி 19 ஆம் தேதி வரை வாரம் ஒருமுறை நேரில் சென்று சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை. இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 45 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் சிறுநீர் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வரும் பேரறுவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக எதிர்க்கட்சிகளும் இது சம்மந்தமாக கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றன.

இதையடுத்து பரோல் இருமுறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து இன்று பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்கிறார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகம் முழுவதும் எழுந்துள்ள நிலையில் அவர் மீண்டும் சிறைக்கு செல்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக சிறை நிர்வாகம் உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இது சம்மந்தமான மனுத்தாக்கல் செய்திருந்தார் அற்புதம் அம்மாள். இந்நிலையில் அற்புதம் அம்மாள் தனக்குக் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் அளித்த பின்னர் வாரம் ஒருமுறை ஜனவரி 19 ஆம் தேதி வரை சந்திக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments