Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வால் அரியலூரில் அடுத்த உயிர் பறிபோனது !

Advertiesment
நீட் தேர்வால் அரியலூரில் அடுத்த உயிர் பறிபோனது !
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:22 IST)
நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் நேற்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம் என முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்தார்.
 
பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவோடு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கொண்டு வரப்பட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று  நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும், ஒரு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. 
 
சேலம் மாணவன் தனுஷை தொடர்ந்து அரியலூரில் கனிமொழி என்கிற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நீட் தேர்வு எழுதி முடித்த மாணவி கனிமொழி தேர்வு முடிவு என்னவாக வரும் என்று மன அழுத்தத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் 12 ஆம் வகுப்பில் 600க்கு 563 மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இனி வாரம் ஒருமுறை வேக்சின் மெகா கேம்ப் !