Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ் இல்லாமல் ஸ்டாலின் எவ்வாறு அழைப்பது... அண்ணமலை கேள்வி!

Advertiesment
ஸ் இல்லாமல் ஸ்டாலின் எவ்வாறு அழைப்பது...  அண்ணமலை கேள்வி!
, வியாழன், 19 மே 2022 (10:44 IST)
ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என அண்ணாமலை பதிவு. 

 
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் பகிர்ந்த தமிழன்னை புகைப்படத்திற்கு மாற்றாக புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தை பதிவிட்டு, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என டிவீட் செய்திருந்தார்.
 
மேலும், அந்த போட்டோவில் வடமொழி சொல்லான ‘ஸ’ எழுதப்பட்டிருப்பதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்த நிலையில் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன்.
 
தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது. "ஸ"வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரஸை பரப்பிய மொபைல் ஆப்ஸ்.. ப்ளேஸ்டோரில் அதிரடி நீக்கம்!