Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை: அண்ணாமலை

Advertiesment
Annamalai

Mahendran

, சனி, 2 மார்ச் 2024 (13:43 IST)
பிரதமர் மோடி அவர்களின் கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அண்ணாமலை உதயநிதி என்பவர் யார்? அவருடைய தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் எடுத்துவிட்டு பார்த்தால் அவரால் இரண்டு ஓட்டுகள் கூட வாங்க முடியாது. 
 
தாத்தா அப்பா சம்பாதித்த பணத்தில் திரைக்கு வந்த ஒரு தோல்வி அடைந்த நடிகர், தாத்தா அப்பா பெயரை பயன்படுத்தி அமைச்சர் ஆனவர் தான் உதயநிதி. உதயநிதி அவர்களே மோடி அவர்களை உடன் ஒப்பிட கூடாது, மோடி அவர்களின் கால் நக தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று கூறினார் 
 
மேலும் மோடியை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் காட்டமாக கூறினார். கமல், ரஜினி போல் உதயநிதி சிறந்த நடிகர் இல்லை. தன்னுடன் சந்தானம் நடித்தால், சந்தானத்தை பார்க்க வருபவர்கள் தன்னையும் பார்ப்பார்கள் என்று சந்தானத்துடன் நடிக்க வந்தவர் தான் உதயநிதி’ என்று உதயநிதி கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தலை காதல்.! கல்லூரி மாணவி கொலை.! வாலிபருக்கு ஆயுள் தண்டனை.!!