இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதி மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்குக் கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அதன்படி அனைத்துக் கட்சிகளும் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தும்படி கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தார்.
அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடக் கூடாது என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதி மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்குக் கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:
''சாதி மதம் மற்றும் மோழி அடிப்படையில் வாக்குக் கேட்கவோ, மத உணர்வுகளை அவமதிக்கவோ கூடாது!. கோயில்கள் , மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களை தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது'' என்று தெரிவித்துள்ளது.