Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது...பிரபல நடிகர் டுவீட்

Advertiesment
Bose Venkat
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:51 IST)
2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில்  திமுக - பாஜக இடையே தான் போட்டி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதற்கு பிரபல நடிகர்  போஸ் வெங்கட் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் இன்று தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த போது,
‘இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து  எதற்கு ஊடகங்களிடம் சொல்ல வேண்டும்? என்று கூறிய அவர், தமிழக மக்களிடத்தில் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்கிறேன்’ என்று தெரிவித்தார்.

 மேலும்,  2024-ல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 2024-ல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சதவீதத்தையும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றும் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கு வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி என்று கூறியிருந்தார்.

இதற்கு பிரபல நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் தன் சமூக வலைதள பக்கத்தில்,’’ சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை பார்த்து  நான்தான் இனிமேல் உங்களுக்கு போட்டி என்று( போஸ் வெங்கட் ) சொன்னால் எவ்வளவு காமடியாக இருக்குமோ அவ்வளவு காமெடி அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது’’ என்று தெரிவித்துள்ளார்.

 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? அன்புமணி