Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னது மெஸ் பீஸ் ஆ? அதிர்ச்சியான அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!

Advertiesment
என்னது மெஸ் பீஸ் ஆ? அதிர்ச்சியான அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:18 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மெஸ் கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் எந்த கல்லூரி மற்றும் பள்ளிகளும் நடக்கவில்லை. அதனால் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்கு மெஸ் கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதாக நக்கீரன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் இந்த செமஸ்டருக்கான மெஸ் கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் என 24,820(சைவம்), 27,820 (அசைவம்) கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதால் மாணவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஏற்கனவே மார்ச் மாதமே விடுதிகளை மூடிவிட்டதால் மீதியுள்ள மாதங்களுக்கான கட்டணமே விடுதி நிர்வாகத்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவர் புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!