அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் மிடில் கிளாஸ் மெலோடிஸ் எனும் திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதில் இருந்து ஓடிடியில் நேரடியாக திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் தெலுங்கில் நேரடியாக ரிலீஸாகியுள்ளது மிடில் கிளாஸ் மெலோடி எனும் திரைப்படம். கொரக்கலூர் என்ற கிராமத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வரும் ராகவன் மற்றும் அவனை சுற்றியுள்ள மனிதர்களின் கதைதான் இந்த திரைப்படம்.
குண்ட்டூரில் ஹோட்டல் வைக்க ஆசைப்படும் ராகவன், ஜோசியத்தை நம்பிக்கொண்டு காதலியை வேண்டாம் என சொல்லும் அவரின் நண்பர், ஊருக்குள் அனைவருக்கும் பால் ஊற்றி தனது பேத்தியைப் படிக்க வைக்கும் தாத்தா, ஊருக்கு நல்ல சாலை அமைக்க வேண்டும் என சொந்த காசை செலவு செய்து ஏமாறும் கவுன்சிலர், தனது மகளை எப்படியாவது ஒரு அரசாங்க அதிகாரிக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என நினைக்கும் நாகேஸ்வர ராவ் ஆகியோரை வைத்து ஒரு பீல்குட் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத் ஆனந்தஜு. கதாபாத்திரங்கள் மற்றும் படத்தில் காட்டப்படும் கிராமம் என அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருப்பதால் இந்த படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.