Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு தற்கொலை

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (14:58 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா இன்று தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று(புதன்கிழமை) மதியம் இரண்டு மணி அளவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சல் காரணமாக நேற்று திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி ஒருவரும்,தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை மாணவி மோனிஷா,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments