Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவை காலி செய்ய டிடிவி போட்ட மாஸ்டர் ப்ளான்!!!

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (12:19 IST)
அமமுகவில் தமிழக வாழ்வுரிமை கட்சி இணைய இருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் நாளை வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் நிற்க உள்ளது.
 
அதிமுக, திமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடுகளை முடிந்துவிட்ட நிலையில் அமமுக, மநீக, போன்ற கட்சிகள் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் இருந்தது.
 
இந்நிலையில் அமமுக துணைப்பொது செயலாளர் தினகரன் தமிழக வாழ்வுரிமைக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 
பாமகவின் இணை பொதுச்செயலாளராக இருந்த வேல்முருகன் கட்சியின் கோட்பாடுகளை மீறியதாக கூறி அவர் கடந்த 2011ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2012ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். 
 
தமிழக வாழ்வுரிமைக்கட்சி சொல்லும் அளவிற்கு பெரிய கட்சி இல்லை என்றாலும் ஒரு தொகுதியிலாவது பாமகவை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான்  டிடிவி, தமிழக வாழ்வுரிமைக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments